ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல்: தமிழக வீரர் உட்பட இந்திய வீரர்கள் இருவர் உயிரிழப்பு

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் தமிழக வீரர் உட்பட இந்திய வீரர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல்: தமிழக வீரர் உட்பட இந்திய வீரர்கள் இருவர் உயிரிழப்பு
Published on

ஜம்மு:

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இந்திய வீரர்கள் இருவர் உயிரிழந்தனர். காஷ்மீரின் காஸிகுண்ட் பகுதியில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் திருவண்ணாமலையைச் சேர்ந்த மணிவண்ணன் என்ற வீரரும், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த நாய்க் திபாக் மைதியும் உயிரிழந்துள்ளனர்.

முன்னதாக காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள லோவர் முன்டா பகுதியில் சென்று கொண்டிருந்த ராணுவ வாகனங்கள் மீது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவர் பலியானார். மேலும் 5 ராணுவ வீரர்கள் காயம் அடைந்தனர்.

அதுமட்டுமல்லாமல் கடந்த 4 நாட்களாக பாகிஸ்தான் ராணுவமும் எல்லை ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com