திடீரென ஊரடங்கு என்பது தவறானது: அதேபோல் ஒரே நேரத்தில் தளர்த்துவதும் தவறு- உத்தவ் தாக்கரே

திடீரென்று ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது தவறு, அதேபோல் ஒரே நேரத்தில் அதை தளர்த்துவதும் தவறான முடிவாக இருக்கும் என உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே
Published on

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் மிகவும் அதிக அளவில் பாதிக்கப்பட்ட மாநிலம் மகாராஷ்டிரா. குறிப்பாக மும்பை மாநகராட்சி பகுதியில் பாதிப்பு அதிக அளவில் உள்ளது.

இந்தியாவில் ஒரு லட்சத்து 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மகாராஷ்டிராவில் மட்டும் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மார்ச் மாதம் 25-ந்தேதியில் இருந்து நாடு தழுவிய ஊரடங்கு அமலில் உள்ளது. திடீரென ஊரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர். தற்போது பல தளர்வுகள் செய்யப்பட்டு வருகின்ளனர்.

மே 31-ந்தேதியுடன் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வருகிறது அதன்பின் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்று யாருக்கும் தெரியவில்லை.

இந்நிலையில் திடீரென ஊரடங்கு அமல்படுத்துவது தவறு என்று மகாராஷ்டிர மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து உத்தவ் தாக்கரே கூறுகையில் ‘‘திடீரென ஊரடங்கு உத்தரவை அமல்படுத்துவது தவறு. அதேபோன்று ஒரே நேரத்தில் தளர்வு என்று அறிவிப்பதும் தவறானதாக முடியும். இது எங்களுடைய மக்களுக்கு இரண்டு பாதிப்பை உண்டாக்குவதாகும்.

ஜிஎஸ்டி-க்கான தொகை இன்னும் மகாராஷ்டிர அரசுக்கு கிடைக்கவில்லை. அதேபோல் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அனுப்பி வைத்ததற்கான தொகையும் வந்து சேரவில்லை. சில மருத்துவ பொருட்கள் தட்டுப்பாட்டில் உள்ளது. ஆரம்ப காலத்தில் PPE உபகரணங்கள் பற்றாக்குறையை சந்திக்கும் நிலையில் இருந்தது’’ என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com