டெல்லி: வாகன உதிரி பாகங்கள் தயாரிப்பு நிறுவனங்களில் ரூ.7 கோடி - 3 கிலோ தங்கம் சிக்கியது

டெல்லியில் உள்ள வாகன உதிரி பாகங்கள் தயாரிப்பு நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் 7 கோடி ரூபாய் பணம் மற்றும் 3 கிலோ தங்கம் பிடிபட்டது.
டெல்லி: வாகன உதிரி பாகங்கள் தயாரிப்பு நிறுவனங்களில் ரூ.7 கோடி - 3 கிலோ தங்கம் சிக்கியது
Published on

புதுடெல்லி:

டெல்லயில் உள்ள வாகன உதிரி பாகங்கள் தயாரிப்பு நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் 7 கோடி ரூபாய் பணம் மற்றும் 3 கிலோ தங்கம் பிடிபட்டது.

டெல்லயில் இயங்கிவரும் வாகன உதிரி பாகங்கள் தயாரிப்பு நிறுவனங்களில் வரி ஏய்ப்பு நடைபெறுவதாக வருமான வரித்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, டெல்லியில் உள்ள பிரபல நிறுவனங்களில் கடந்த வியாழக்க்கிழமையில் இருந்து அதிகாரிகள் சோதனை நடத்தி வந்தனர். இன்றும் 50-க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் சோதனை நடைபெற்றது. குறிப்பாக, மாருதி சுசுகி கார் தயாரிப்பு நிறுவனம் மற்றும் அசோக் லேலன்ட் நிறுவனத்துக்கு உதிரி பாகங்களை அனுப்பும் ஜெய் பாரத் மாருதி நிறுவனத்துக்கு சொந்தமாக டெல்லி, குருகிராம், பரிதாபாத், காசியாபாத் ஆகிய பகுதிகளில் உள்ள நிறுவனங்களில் நடைபெற்ற இந்த சோதனையில் 7 கோடி ரூபாய் பணம் மற்றும் 3 கிலோ தங்கம் பிடிபட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com