

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ‘ககன்யான்’ திட்டத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமான இஸ்ரோ செயல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதற்காக இந்திய விமானப்படையில் இருந்து 4 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கான பயிற்சி விரைவில் ரஷியாவில் தொடங்க இருப்பதாகவும் அறிவித்துள்ளது.
இந்த உணவு வகைகளை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் கீழ் உணவு பாதுகாப்பு ஆராய்ச்சி ஆய்வகம் உருவாக்கி இருக்கிறது. இது குறித்து உணவு பாதுகாப்பு ஆராய்ச்சி ஆய்வக அதிகாரிகள் கூறும்போது, இஸ்ரோ மற்றும் விண்வெளி வீரர்கள் எந்த வகையான உணவுகளை விரும்புகிறார்கள் என்பதை இறுதி செய்வோம். அதன்பின் அதில் மாற்றங்கள் கூட செய்வோம்.
இந்த உணவுகளை தவிர உணவுகளை சூடாக வழங்கும் தொழில் நுட்பம், கழிவுகளை அகற்றும் கருவி உள்ளிட்டவற்றை வழங்க நாங்கள் பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.
உணவு பட்டியலில் சப்பாத்தி, சிக்கன் பிரியாணி, சுஜி அல்வா, சிக்கன் கறி, பாதாம், கீரை, பன்னீர் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.
புவிஈர்ப்பு இல்லாத விண்வெளியில் உணவுகளை பாக்கெட்டில் இருந்து வெளியே எடுக்கும் போது அது தவறி போகும் வாய்ப்பு உள்ளது. அது தவிர்க்கப்பட வேண்டும் என்பதால் அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறோம்.