இஸ்ரேல் ஓட்டலில் மோடி தங்குவதற்கு குண்டு துளைக்காத அறை

இஸ்ரேலில் உள்ள கிங்டே விட் ஓட்டலில் மோடி தங்குவதற்கு குண்டு துளைக்காத அறை, அதிநவீன வசதிகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் கொண்டது.
இஸ்ரேல் ஓட்டலில் மோடி தங்குவதற்கு குண்டு துளைக்காத அறை
Published on

ஜெருசலேம்:

பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் அரசு முறை பயணமாக இஸ்ரேல் சென்றுள்ளார். 3 நாட்களும் அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

இஸ்ரேலில் உள்ள கிங் டேவிட் ஓட்டலில் மோடி தங்கியுள்ளார். இந்த ஓட்டலில் 100 அறைகள் உள்ளன. இங்கு தான் மோடியும் அவரது குழுவினரும் தங்கியுள்ளனர். மோடி தங்கியுள்ள அறை அதிநவீன வசதிகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் கொண்டது.

வெடிகுண்டு வைத்து இந்த ஓட்டல் தகர்க்கப்பட்டாலும் கூட மோடி தங்கியுள்ள அறையை தகர்க்க முடியாது. அந்த அளவுக்கு மோடி தங்கியுள்ள அறை பாதுகாப்பு அம்சங்கள் கொண்டது. இதற்கு முன்பு இஸ்ரேலில் சுற்றுப் பயணம் செய்த அனைத்து அமெரிக்க ஜனாதிபதிகளும் இந்த ஓட்டலில் தான் தங்கியுள்ளனர்.

மோடி தங்கியுள்ள அறையில் தனியாக சமையல் அறையும் உள்ளது. இங்கு சமையல் கலைநிபுணர் ரினா புஷ்கர்னா தலைமையிலான சமையல் கலைஞர்கள் மோடிக்கு பிடித்தமான உணவு வகைகளை சமைத்து பரிமாறுகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com