ரெயில்வே ஓட்டல் குத்தகை ஊழல் வழக்கில் லாலுவின் மனைவி, மகனுக்கு ஜாமீன்

ரெயில்வே ஓட்டல்களை குத்தகை ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவின் மனைவி மற்றும் மகனுக்கு சிபிஐ நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியது. #IRCTCScam #Lalu #RabriDevi #TejashwiYadav
ரெயில்வே ஓட்டல் குத்தகை ஊழல் வழக்கில் லாலுவின் மனைவி, மகனுக்கு ஜாமீன்
Published on

புதுடெல்லி:

ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவரும், பீகார் மாநில முன்னாள் முதல்-மந்திரியுமான லாலு பிரசாத் யாதவ், கடந்த 2004 முதல் 2009-ம் ஆண்டு வரை மத்திய ரெயில்வே மந்திரியாக இருந்தார். அவரது பதவிக்காலத்தில் ரெயில்வேயின் ஐ.ஆர்.சி.டி.சி-க்கு சொந்தமான ஓட்டல்களை தனியார் நிறுவனத்திற்கு குத்தகைக்கு விட்டதில் ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது.

இது தொடர்பாக லாலு பிரசாத் யாதவ், அவரது குடும்பத்தினர் மற்றும் ஐஆர்சிடிசியின் அப்போதைய அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தது. இதன் அடிப்படையில் லாலு, மனைவி ராப்ரி தேவி, மகன் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் மீது சட்டவிரோத பணப் பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் தனியாக வழக்கு பதிவு செய்தது.

இந்நிலையில், ஜாமீன் கேட்டு லாலுவின் மனைவி ராப்ரி தேவி, மகன் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் மனு  தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்களை பரிசீலித்த நீதிபதி, சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குகளில் லாலு பிரசாத் தவிர மற்ற அனைவருக்கும் இடைக்கால ஜாமீன் வழங்கினார். இந்த ஜாமீன் காலம் இன்று நிறைவடைந்ததையடுத்து, இன்று மீண்டும் ஜாமீன் மனுக்கள் மீது விசாரணை நடைபெற்றது.

அப்போது, சிபிஐ வழக்கில் ராப்ரிதேவி, தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட அனைவருக்கும் ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். ஆனால், அமலாக்கத்துறை வழக்கில் பதில்மனு தாக்கல் செய்வதற்கு அமலாக்கத்துறை தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது. எனவே, குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் நிரந்தர ஜாமீன் வழங்கப்படவில்லை. நவம்பர் 19-ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும், நவம்பர் 19-ம் தேதி இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும்போது, லாலு பிரசாத்தை வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். லாலு பிரசாத் யாதவ் மற்றொரு வழக்கில் தண்டனை பெற்று, ஜார்க்கண்ட் சிறையில் அடைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. #IRCTCScam #Lalu #RabriDevi #TejashwiYadav

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com