ஐபிஎல் ஏலம்: கோடிகளை அள்ளிய U19 உலகக்கோப்பை வீரர்கள்

ஐபிஎல் தொடரில் U19 உலகக்கோப்பை தொடரில் விளையாடும் இந்திய இளைஞர்கள் கோடிகளில் ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர். #IPLAuction #IPLAuction2018 #KKR
ஐபிஎல் ஏலம்: கோடிகளை அள்ளிய U19 உலகக்கோப்பை வீரர்கள்
Published on

இவர்களின் அடிப்படை ஏலத்தொகை 20 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டது. U19 உலகக்கோப்பை தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஷுப்மான் கில்லை ஏலம் எடுக்க கடும் போட்டி நிலவியது. இறுதியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஒரு கோடியே 80 லட்சம் ரூபாய் கொடுத்து ஏலம் எடுத்தது.

ரஞ்சி டிராபியில் சதம், உள்ளூர் போட்டியில் சதம், U19 உலகக்கோப்பையில் மூன்று அரைசதங்கள் விளாசிய கேப்டன் பிரித்வி ஷாவை டெல்லி அணி 1 கோடியே 20 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கியது.

U19 உலகக்கோப்பையில் 140 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசி அசத்தும் கம்லேஷ் நகர்கோட்டியை எடுக்கவும் கடும் போட்டி நிலவியது.

X

Maalai Malar
www.maalaimalar.com