

அதன்பின் பிறகு லோகேஷ் ராகுலை பஞ்சாப் அணியும், மணீஷ் பாண்டேவை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் தலா 11 கோடி ரூபாய் கொடுத்து அதிகபட்ச தொகைக்கு வாங்கியது.
இன்று 2-வது நாள் ஏலம் தொடங்கியது. பெரும்பாலான வீரர்கள் ஐந்து கோடியை தாண்டவில்லை. வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ் உனத்கட்டை ஏலம் விடும்போது சென்னை சூப்பர் கிங்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் வாங்குவதற்கு ஆர்வம் காட்டின. இதனால் அவரது விலை ஏறிக்கொண்டே சென்றது. ஒரு கட்டத்தில் பஞ்சாப் அணி 11 கோடி ரூபாய் கொடுத்து வாங்க தயாரானது.
அதுவரை உனத்கட்டை வாங்குவதற்கு ஆர்வம் காட்டாத ராஜஸ்தான் ராயல்ஸ் திடீரென 11.5 கோடி ரூபாய்க்கு கேட்டது. அதற்கு மேல் மற்ற அணி உரிமையாளர்கள் கேட்க விரும்பவில்லை. இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 11.5 கோடி ரூபாய் கொடுத்து உனத்கட்டை வாங்கியது.
வெளிநாட்டு வீரரான பென் ஸ்டோக்ஸை தவிர்த்து இந்திய வீரர்கள் உள்பட அதிக விலைக்குப் போன 2-வது வீரரானார் உனத்கட். மேலும் அதிக விலைக்குச் சென்ற முதல் இரண்டு வீரர்களையும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிதான் வாங்கியுள்ளது. பென் ஸ்டோக்ஸ், உனத்கட்டை ஆகியோருக்காக 24 கோடி ரூபாய் செலவழித்துள்ளது.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் மணீஷ் பாண்டேவிற்கு 11 கோடி, ரஷித் கானுக்கு 9 கோடி என 20 கோடி ரூபாய் செலவழித்துள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கிறிஸ் லின்னிற்கு 9.6 கோடி, மிட்செல் ஸ்டார்க்கிற்கு 9.4 கோடி என 19 கோடி ரூபாய் செலவழித்துள்ளது.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் லோகேஷ் ராகுலுக்கு 11 கோடி, அஸ்வினுக்கு 7.6 கோடி என 18.6 கோடி ரூபாய் செலவழித்துள்ளது.
மும்பை இந்தியன்ஸ் குருணால் பாண்டியாவிற்கு 8.8 கோடி, இஷான் கிஷானிற்கு 6.2 கோடி ரூபாய் என 15 கோடி ரூபாய் செலவழித்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் கேதர் ஜாதவிற்கு 7.8 கோடியும், பிராவோவிற்கு 6.4 கோடி என 14.2 கோடி ரூபாய் செலவழித்துள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் கிறிஸ் வோக்ஸிற்கு 7.4 கோடி, சாஹலிற்கு 6 கோடி என 13.4 கோடி ரூபாய் செலவழித்துள்ளது.