ஸ்மித் இடத்திற்கு தென்ஆப்பிரிக்கா விக்கெட் கீப்பரை விரும்பும் ராஜஸ்தான்

ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்மித்திற்குப் பதிலாக தென்ஆப்பிரிக்கா விக்கெட் கீப்பர் ஹெய்ன்ரிச் கிளாசனை எடுக்க விரும்புகிறது ராஜஸ்தான் ராயல்ஸ். #RR #IPL2018
ஸ்மித் இடத்திற்கு தென்ஆப்பிரிக்கா விக்கெட் கீப்பரை விரும்பும் ராஜஸ்தான்
Published on

இதனால் ஸ்மித், வார்னருக்கு கிரிக்கெட் ஆஸ்திரேலியா ஓராண்டு தடை விதித்துள்ளது. இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்து ஸ்மித்தும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு கேப்டனாக இருந்து வார்னரும் தங்களது பதவியை ராஜினாமா செய்தார்கள். அத்துடன் இருவருக்கும் தடைவிதிக்கப்பட்டது.

இதனால் முக்கியமான வீரர்களை இழந்துள்ள இரண்டு அணிகளும் தரமான வீரர்களை கொண்டு அந்த இடத்தை நிரப்ப வேண்டும் என்று நினைக்கிறது. தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தென்ஆப்பிரிக்கா விக்கெட் கீப்பரான ஹெய்ன்ரிச் கிளாசனை ஸ்மித்திற்குப் பதிலாக சேர்க்க விரும்புகிறது.

தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னணி விக்கெட் கீப்பரான குயின்டான் டி காக் காயம் காரணமாக இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து விலகினார். அவருக்கு மாற்று விக்கெட் கீப்பராக இணைந்தவர்தான் கிளாசன்.

இந்தியாவிற்கு எதிராக நான்கு ஒருநாள் போட்டியில் 110 ரன்கள் அடித்தார். 3 டி20 போட்டியில் 92 ரன்கள் அடித்தார். 2-வது டி20 போட்டியில் 69 ரன்கள் அடித்தார். இந்த போட்டியில் இந்தியாவின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான சாஹல் பந்தை நேர்த்தியாக எதிர்கொண்டார். பந்தை சிக்சருக்கும் பவுண்டரிக்கும் விரட்டினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com