ஐரோப்பாவில் தாக்குதல் நடத்த தயார் நிலையில் 173 தற்கொலைப்படை தீவிரவாதிகள்: இண்டர்போல்

ஐரோப்பிய நாடுகளில் தாக்குதல் நடத்த தயாராக உள்ள 173 ஐ.எஸ். தற்கொலைப்படை தீவிரவாதிகளின் பெயர்களை சர்வதேச போலீசார் (இண்டர்போல்) வெளியிட்டுள்ளனர்.
ஐரோப்பாவில் தாக்குதல் நடத்த தயார் நிலையில் 173 தற்கொலைப்படை தீவிரவாதிகள்: இண்டர்போல்
Published on

பாரிஸ்:

ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ், ஜெர்மனி, பெல்ஜியம், பிரிட்டம் ஆகியவற்றில் கடந்த சில மாதங்களாக தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்து வருகின்றனர். கடந்த ஜூன் 3-ம் தேதி ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய கார் குண்டு தாக்குதலில் 8 பேர் உயிரிழந்ததோடு 48 பேர், காயமடைந்தனர். இதேபோல ஜூன் 22-ம் தேதி இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் 22 பேர் உயிரிழந்தனர், மேலும் 119 பேர் காயமடைந்தனர்.

இந்தாண்டு தொடக்கத்திலிருந்து ஜூன் 30-ம் தேதிவரை ஐரோப்பிய நாடுகளில் சுமார் 24 தீவிரவாத தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன. இத்தாக்குதல்களில் மட்டும் சுமார் 105 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர், 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில், ஐரோப்பிய நாடுகளில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த ஐ.எஸ். அமைப்பு திட்டமிட்டிருப்பதாக சர்வதேச போலீசார் (இண்டர்போல்) தெரிவித்துள்ளனர். மேலும், அந்த தாக்குதலை நடத்த அதிக வாய்ப்புள்ள 173 தீவிரவாதிகளின் பெயர்களையும் சர்வதேச போலீசார் வெளியிட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com