அநீதி வீழும், அறம் வெல்லும்: 2ஜி தீர்ப்பு குறித்து கருணாநிதி கருத்து

அநீதி வீழும், அறம் வெல்லும் என, 2ஜி வழக்கின் தீர்ப்பு குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி கருத்து தெரிவித்துள்ளார்.
அநீதி வீழும், அறம் வெல்லும்: 2ஜி தீர்ப்பு குறித்து கருணாநிதி கருத்து
Published on

சென்னை:

2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்து டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பை தி.மு.க.வினர் இனிப்பு வழங்கியும் பட்டாசு வெடித்தும் கொண்டாடி வருகின்றனர். தீர்ப்பு வழங்கியதும் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார்.

தி.மு.க.வை அழக்க வேண்டும் என திட்டமிட்டு 2ஜி வழக்கு தொடரப்பட்டது  என்றும், நீதிமன்ற தீர்ப்பில் இருந்து தி.மு.க. எந்த தவறும் செய்யவில்லை என நிரூபணம் ஆகியிருப்பதாகவும் அவர் கூறினார்.

இந்நிலையில், 2ஜி தீர்ப்பை வரவேற்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கருத்து தெரிவித்துள்ளார். ‘அநீதி வீழும், அறம் வெல்லும்’ என கருணாநிதி தனது கைப்பட எழுதி காட்டியுள்ளார். அந்த படிவம் சமூக வலைத்தளம் மூலம் வெளியாகி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com