சர்வதேச போட்டிகளில் 50 சதங்கள் அடித்து விராட் கோலி சாதனை

கொல்கத்தா ஈடன் கார்டனில் சதம் அடித்ததன் மூலம் சர்வதேச போட்டிகளில் 50 சதங்கள் அடித்து விராட் கோலி சாதனைப் படைத்துள்ளார்.
சர்வதேச போட்டிகளில் 50 சதங்கள் அடித்து விராட் கோலி சாதனை
Published on

2-வது இன்னிங்சில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். டெஸ்ட் போட்டியில் விராட் கோலியின் 18-வது சதம் இதுவாகும். இதன்மூலம் சர்வதேச போட்டிகளில் ஒட்டுமொத்தமாக 50 சதம் அடித்து அசத்தியுள்ளார். ஒருநாள் போட்டியில் 32 சதங்கள் அடித்துள்ளார்.

இந்திய வீரர் சச்சின் தெண்டுல்கர் 100 சதங்கள் அடித்து முதல் இடத்தில் உள்ளார். பாண்டிங் 71 சதங்களுடன் 2-வது இடத்திலும், சங்ககரா 63 சதங்களுடன் 3-வது இடத்திலும், கல்லீஸ் 62 சதங்களுடன் 4-வது இடத்திலும், அம்லா 54 சதங்களுடன் 5-வது இடத்திலும், ஜெயவர்தனே 54 சதங்களுடன் 6-வது இடத்திலும், லாரா 53 சதங்களுடன் 7-வது இடத்திலும் உள்ளனர். விராட் கோலி 50 சதங்களுடன் 8-வது இடத்தில் உள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com