இந்தியாவிலேயே மிக மூத்த அரசியல் தலைவர் கருணாநிதி: விஜயகாந்த் புகழாரம்

திமுக தலைவர் கருணாநிதிக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் மற்றும் வைரவிழா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலேயே மிக மூத்த அரசியல் தலைவர் கருணாநிதி: விஜயகாந்த் புகழாரம்
Published on

திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி, கடந்த 1957-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் குளித்தலை தொகுதியில் வென்று முதல்முறையாக எம்.எல்.ஏ. ஆனார். அதன்பின்னர் அவர் போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக உள்ளார். எனவே, கருணாநிதியின் 60 ஆண்டுகால சட்டப்பேரவை வைர விழாவை அவரது 94-வது பிறந்த நாளான ஜூன் 3-ம் தேதி மிகச் சிறப்பாகக் கொண்டாட திமுக ஏற்பாடுகளை செய்து வருகிறது.

கருணாநிதியின் வைரவிழாவில் ராகுல் காந்தி உள்ளிட்ட தேசிய தலைவர்கள் பலரும் கலந்து கொள்ள உள்ளதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வைர விழா கொண்டாட உள்ள கருணாநிதிக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதிக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் மற்றும் வைரவிழா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com