ஆசிய ஜுனியர் ஜுடோ சாம்பியன்ஷிப் போட்டி: இந்தியாவிற்கு 3 வெண்கலப் பதக்கங்கள்

கிர்கிஸ்தான் நாட்டில் நடைபெற்று வரும் ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் பல்வேறு பிரிவுகளில் இந்திய வீரர்கள் 3 வெண்கலப்பதக்கங்களை வென்றுள்ளனர்.
ஆசிய ஜுனியர் ஜுடோ சாம்பியன்ஷிப் போட்டி: இந்தியாவிற்கு 3 வெண்கலப் பதக்கங்கள்
Published on

பிஸ்கெக்:

கிர்கிஸ்தான் நாட்டில் நடைபெற்று வரும் ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் பல்வேறு பிரிவுகளில் இந்திய வீரர்கள் 3 வெண்கலப்பதக்கங்களை வென்றுள்ளனர்.

கிர்கிஸ்தானில் ஆசிய ஜுனியர் ஜுடோ சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில், ஆசியாவைச் சேர்ந்த நாடுகளின் ஜூனியர் வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் இந்தியாவைச் சேர்ந்த ஜூனியர் ஜூடோ வீரர்கள் பல்வேறு பிரிவுகளில் கலந்து கொண்டனர்.

உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த ப்ரீத்தி 44 கிலோ எடைபிரிவிலும், 52 கிலோ எடைப் பிரிவில் டெல்லியை சேர்ந்த பிங்கி பல்ஹாராவும், 78 கிலோ எடை பிரிவில் துலிகா மான் வெற்றி பெற்று வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றினர். இதன்மூலம் ஜுடோ சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவிற்கு 3 வெண்கலப் பதக்கங்கள் கிடைத்துள்ளன.

இந்த வெற்றிகள் மூலம் பஹாமாஸ் நாட்டில் நடக்க உள்ள இளையோர் காமன்வெல்த் போட்டிகளுக்கு மூவரும் தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com