நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகளில் விளையாடும் இந்திய ஆக்கி அணி

ராணி தலைமையிலான இந்திய பெண்கள் ஆக்கி அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 ஆட்டங்கள் கொண்ட போட்டி தொடரில் விளையாடுகிறது.
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகளில் விளையாடும் இந்திய ஆக்கி அணி
Published on

ராணி தலைமையிலான இந்திய பெண்கள் ஆக்கி அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 ஆட்டங்கள் கொண்ட போட்டி தொடரில் விளையாடுகிறது. இந்தியா-நியூசிலாந்து பெண்கள் அணிகள் இடையிலான முதலாவது ஆட்டம் வருகிற 14-ந் தேதி நடக்கிறது.

இந்த போட்டி தொடருக்கான இந்திய பெண்கள் ஆக்கி அணி நேற்று டெல்லியில் இருந்து புறப்பட்டு சென்றது.

இந்த போட்டி குறித்து இந்திய அணியின் கேப்டன் ராணி கருத்து தெரிவிக்கையில், ‘இன்னும் 3 மாதங்களில் நடக்க இருக்கும் உலக லீக் அரைஇறுதி போட்டிக்கு தயாராக இந்த போட்டி தொடர் பயனுள்ளதாக இருக்கும். உயர்ந்த தர வரிசையில் உள்ள நியூசிலாந்து அணியுடன் ஆடுவது நமது ஆட்ட தரத்தை மேலும் உயர்த்துவதுடன், நமது பலவீனத்தை புரிந்து கொள்ளவும் உதவும்’ என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com