இந்திய அணி ஜூன் கடைசியில் வெஸ்ட்இண்டீஸ் பயணம்

இந்திய கிரிக்கெட் அணி ஜூன் கடைசியில் 5 ஒருநாள் போட்டி மற்றும் ஒரே ஒரு 20 ஓவர் போட்டியில் விளையாட வெஸ்ட்இண்டீஸ் செல்கிறது.
இந்திய அணி ஜூன் கடைசியில் வெஸ்ட்இண்டீஸ் பயணம்
Published on

மும்பை:

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (ஜூன்) 1-ந்தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. ஜூன் 18-ந்தேதி வரை இந்தப் போட்டி நடக்கிறது.

சாம்பியன்ஸ் டிராபி போட்டி முடிந்த பிறகு விராட் கோலி தலைமையிலான இந்திய அணி அங்கிருந்து வெஸ்ட் இண்டீஸ் செல்கிறது. ஜூன் 23-ந்தேதி முதல் ஜூலை 9-ந்தேதி வரை இந்திய அணி வெஸ்ட்இண்டீசில் 5 ஒருநாள் போட்டி மற்றும் ஒரே ஒரு 20 ஓவர் ஆட்டத்தில் விளையாடுகிறது.

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் போட்டி விவரம்:-

ஜூன் 23: முதல் ஒருநாள் போட்டி (போர்ட்ஆப் ஸ்பெயின்).

ஜூன் 25: 2-வது ஒருநாள் போட்டி (போர்ட்ஆப் ஸ்பெயின்).

ஜூன் 30: 3-வது ஒருநாள் ஆட்டம் (ஆன்டிகுவா).

ஜூலை 2: 4-வது ஒருநாள் போட்டி (ஆன்டிகுவா).

ஜூலை 6:  கடைசி ஒருநாள் ஆட்டம் (ஜமைக்கா).

ஜூலை 9: 20 ஓவர் போட்டி (ஜமைக்கா).

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com