காமன்வெல்த் 2018: இந்தியாவுக்கு 3-வது தங்கப்பதக்கத்தை வென்று கொடுத்த தமிழக வீரர்

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் ஆடவர் பளுதூக்குதலில் இந்தியா 3-வது தங்க பதக்கத்தை வென்றுள்ளது. #CommonwealthGames #SathishSivalingam #Weightlifting
காமன்வெல்த் 2018: இந்தியாவுக்கு 3-வது தங்கப்பதக்கத்தை வென்று கொடுத்த தமிழக வீரர்
Published on

கோல்டுகோஸ்ட்:

21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது.

இந்த நிலையில், இன்று நடைபெற்ற ஆடவருக்கான பளுதூக்குதல் 77 கிலோ எடைப்பிரிவில் தமிழக வீரர் சதீஷ் சிவலிங்கம் தங்கம் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். தங்கப்பதக்கம் வென்ற சதீஷ்குமார் சிவலிங்கம் தமிழகத்தைச்சேர்ந்தவர் ஆவார். வேலுர் மாவட்டம் சத்துவாச்சாரியைச்சேர்ந்த சதீஷ்குமார் சிவலிங்கம் கடந்த முறை ஸ்காட்லாந்தில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியிலும் தங்கம் வென்று இருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.

காமன்வெல்த் போட்டியில் இந்தியா தற்போது வரை 3 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் 5 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. #CWG2018

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com