பிரதமர் மோடி முன்னிலையில் இந்தியா - வியட்நாம் இடையே புதிய ஒப்பந்தங்கள் கையொப்பமாகின

வியட்நாம் அதிபர் திரன் தாய் குவாங் - பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் இரு நாடுகளுக்கு இடையில் புதிய ஒப்பந்தங்கள் இன்று கையொப்பமாகின.
பிரதமர் மோடி முன்னிலையில் இந்தியா - வியட்நாம் இடையே புதிய ஒப்பந்தங்கள் கையொப்பமாகின
Published on

வியட்நாம் அதிபர் திரன் தாய் குவாங் தனது மனைவியுடன் மூன்று நாள் அரசு முறைப்பயணமாக இந்தியா வந்துள்ளார். ஜனாதிபதி மாளிகையில் அவருக்கு முப்படை அணிவகுப்புடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

டெல்லி ராஜ்காட் பகுதியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்துக்கு சென்ற திரன் தாய் குவாங், அங்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

பின்னர், வியட்நாம் அதிபர் திரன் தாய் குவாங் - பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத்துறை சுஷ்மா சுவராஜ்  முன்னிலையில் இரு நாடுகளுக்கு இடையில் அணுசக்தி ஒத்துழைப்பு, ராணுவம், எண்ணெய் மற்றும் எரிவாயு, வர்த்தகம், வேளாண்மை உள்ளிட்ட புதிய ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.

அப்போது, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிரதமர் மோடி, ‘இந்திய - பசிபிக் துணைக்கண்டத்தின் வளமையும், சுதந்திரமும் மேலோங்கும் வகையிலும், இறையாண்மையும், சர்வதேச சட்டங்களும் மதிப்புடன் பாதுகாக்கப்படும் வகையிலும் வியட்நாமும் இந்தியாவும் இணைந்து செயல்படும்’ என குறிப்பிட்டார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com