டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் பங்கேற்க இந்திய அணி பாகிஸ்தான் பயணம்

பாகிஸ்தானில் நடைபெற உள்ள டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரில் விளையாட இந்திய அணி பாகிஸ்தான் செல்கிறது என டென்னிஸ் சங்கம் இன்று அறிவித்துள்ளது.
டென்னிஸ்
டென்னிஸ்
Published on

புதுடெல்லி:

பாகிஸ்தான் நாட்டின் இஸ்லாமாபாத் நகரில் செப்டம்பர் 14, 15 ஆம் தேதிகளில் டேவிஸ் கோப்பை தொடர் நடைபெறுகிறது. இந்த தொடரில் பங்கேற்க இந்திய டென்னிஸ் அணி பாகிஸ்தான் நாட்டிற்கு செல்கிறது

டேவிஸ் கோப்பை என்பது இந்தியா - பாகிஸ்தான் இடையேயான தொடர் அல்ல. உலக அளவிலான போட்டி தொடர் என்பதால் இந்திய அணி பாகிஸ்தான் செல்கிறது என டென்னிஸ் சங்கம் இன்று விளக்கம் அளித்துள்ளது.

55 ஆண்டுகளில் இந்திய டென்னிஸ் அணி முதல்முறையாக பாகிஸ்தான் செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com