

கொரோனா தொற்று பாதிப்பு குறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 14,348 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 13,198 பேர் குணமடைந்துள்ள நிலையில், 805 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுவரை இந்தியாவில் கொரோனா தொற்றால் 3,42,46,157 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,36,27,632 பேர் குணமடைந்துள்ளனர். 4,57,191 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று 12,84,552 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 74,33,392 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை 1,04,82,00,966 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்... நடிகர் ரஜினிக்கு இப்படி ஒரு பாதிப்பா? - வெளியான புதிய தகவல்