மொபைல் டவுன்லோடு வேகம்: 109-வது இடத்தில் இந்தியா

சர்வதேச மொபைல் டவுன்லோடு வேகத்தில் இந்தியா 109-வது இடத்தில் இருப்பதாக ஊக்லா வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மொபைல் டவுன்லோடு வேகம்: 109-வது இடத்தில் இந்தியா
Published on

இண்டர்நெட் பயன்படுத்துவோர் எண்ணக்கையை பொருத்த வரை உலகளவில் இரண்டாவது இடத்தில் இந்தியா இருக்கிறது. என்னும் மொபைல் டவுன்லோடு வேகத்தை ஒப்பிடும் போது நவம்பர் 2017 நிலவரப்படி இந்தியா 109-வது இடத்தை பிடித்துள்ளதாக ஊக்லா நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு துவக்கத்தில் நொடிக்கு 7.65 எம்பியாக இருந்த மொபைல் டவுன்லோடு வேகம், நவம்பர் மாத நிலவரப்படி நொடிக்கு 8.80 எம்பியாக இருந்துள்ளது. இது முன்பை விட 15 சதவிகிதம் அதிகம் ஆகும்.

சர்வதேச சந்தையில் அதிவேக மொபைல் டவுன்லோடு வழங்கிய நாடுகள் பட்டியலில் நார்வே முதலிடம் பிடித்துள்ளது. நார்வே நாட்டில் நொடிக்கு 62.66 எம்பி வேகம் வழங்குகிறது. பிராட்பேண்ட் டவுன்லோடு வேகத்தை பொருத்த வரை இந்தியா 76-வது இடத்தில் உள்ளது.


இந்த ஆண்டு ஜனவரி மாத நிலவரப்படி பிராட்பேண்ட் டவுன்லோடு வேகம் சராசரியாக நொடிக்கு 12.12 எம்பியாக இருந்தது. இதுவே நவம்பர் மாத வாக்கில் நொடிக்கு 18.82 எம்பியாக அதிகரித்துள்ளது. இதே ஆண்டில் பிராட்பேண்ட் டவுன்லோடு வேகம் 50 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com