தினகரன் புதுவை வீட்டிலும் வருமான வரி சோதனை

புதுவை அருகே ஆரோவில்லில் உள்ள தினகரனுக்கு சொந்தமாக பண்ணை வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
தினகரன் புதுவை வீட்டிலும் வருமான வரி சோதனை
Published on

தமிழகம் முழுவதும் தினகரன் மற்றும் அவரது உறவினர் வீடுகளில் மத்திய வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் தினகரனுக்கு சொந்தமாக புதுவை அருகே உள்ள ஆரோவில்லில் 100 ஏக்கர் கொண்ட பண்ணை வீடு உள்ளது.

இந்த பண்ணை வீட்டுக்கு தினகரன் அவ்வப்போது குடும்பத்துடன் தங்கி ஓய்வெடுப்பது வழக்கம். அதுபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு தினகரன் இந்த பண்ணை வீட்டில் தங்கி ஓய்வெடுத்து விட்டு சென்றார்.

நேற்று இரவு 12 மணியளவில் மத்திய வருமான வரித்துறை அதிகாரிகள் தினகரனின் பண்ணை வீட்டில் சோதனை நடத்த ஆரோவில் வந்தனர். காடுகள் நிறைந்த பகுதி என்பதால் பாதுகாப்பு கருதி அவர்கள் புதுவை திரும்பினர்.

இரவில் ஒரு ஓட்டலில் தங்கிய மத்திய வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை 8 மணிக்கு தினகரனின் பண்ணை வீட்டுக்கு வந்தனர். அங்கு 5 பேர் கொண்ட குழுவினர் தொடர்ந்து சோதனை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com