பாக். பயங்கரவாதத்தை நிறுத்தினால் நீரஜ் சோப்ரா போல நாங்கள் இருக்கிறோம்- பிபின் ராவத்

பாகிஸ்தான் பயங்கரவாதத்தை நிறுத்திக் கொண்டால் நீரஜ் சோப்ரா போல நாங்கள் இருக்கிறோம் என ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார். #NeerajChopra #BibinRawat
பாக். பயங்கரவாதத்தை நிறுத்தினால் நீரஜ் சோப்ரா போல நாங்கள் இருக்கிறோம்- பிபின் ராவத்
Published on

புதுடெல்லி:

சமீபத்தில் நடந்து முடிந்த ஆசிய விளையாட்டு தொடரில் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கமும், பாகிஸ்தான் வீரர் வெண்கலப்பதக்கமும் வென்றனர். பதக்க மேடையில் அவர்கள் ஒருவருக்கொருவர் கைகுலுக்கி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர். 

இந்நிலையில், ஆசிய விளையாட்டு தொடரில் பதக்கம் வென்ற ராணுவ வீரர்களுக்கு நடந்த பாராட்டு விழாவில் கலந்து கொண்ட தலைமை தளபதி பிபின் ராவத்திடம், ‘எல்லையிலும் இது போன்ற நிகழ்வு நடக்குமா?’ என கேள்வி எழுப்பப்பட்டது. 

அதற்கு பதிலளித்த அவர், “முதலில் அவர்கள் (பாகிஸ்தான்) முன்வரட்டும், பயங்கரவாதத்தை நிறுத்தட்டும். அதன் பின்னர் நாங்களும் நீரஜ் சோப்ரா போல நடந்து கொள்கிறோம்” என கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com