எம்.எஸ்.சுப்புலெட்சுமி இந்தியாவின் நைட்டிங்கேள் - வெங்கையா நாயுடு

கர்நாடக இசைப்பாடகி டாக்டர் எம்.எஸ்.சுப்பு லெட்சுமியை இந்தியாவின் நைட்டிங்கேள் என துணை ஜனாதிபதி எம்.வெங்கையா நாயுடு வர்ணித்துள்ளார்.
எம்.எஸ்.சுப்புலெட்சுமி இந்தியாவின் நைட்டிங்கேள்  - வெங்கையா நாயுடு
Published on

சென்னை:

இந்தியாவின் துணை ஜனாதிபதியான எம்.வெங்கையா நாயுடு சென்னையில் லலித் கலா அகடமியில் நடைபெற்ற மறைந்த கர்நாடக இசைப்பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமி வாழ்க்கை வரலாற்று புகைப்பட கண்காட்சியை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

டாக்டர் எம்.எஸ்.சுப்புலெட்சுமி மிகச்சிறந்த கர்நாடக பாடகி ஆவார். அவர் தன் வாழ்க்கையை இசைக்காக அர்ப்பணித்தார். அவர் பாடிய  பக்தி பாடல்கள் மற்றும் பாரதியின் தேசப்பக்தி பாடல்கள் மிகவும் எழுச்சி மிக்கவையாக இருக்கும். இப்பாடல்களுக்கு அழிவே இருக்காது.

மேலும், டாக்டர் சரோஜினி நாயுடு தனது கவிதைகள் மூலம் இந்தியாவின் நைட்டிங்கேள் என்ற பட்டம் பெற்றார். அதே போல் டாக்டர் எம்.எஸ்.சுப்புலெட்சுமியும் தனது குரலினால் இந்தியாவின் நைட்டிங்கேள் ஆவார்.

என வெங்கையா நாயுடு கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com