உலக கோப்பைக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு - பொல்லார்ட், நரைனுக்கு இடமில்லை

அடுத்த மாதம் தொடங்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. #westIndies #CWC2019
உலக கோப்பைக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு - பொல்லார்ட், நரைனுக்கு இடமில்லை
Published on

10 அணிகள் இடையிலான உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் அடுத்த மாதம் 30-ந்தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கான உத்தேச அணிகளின் பட்டியலை ஏப்ரல் 23-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) கெடு விதித்து இருந்தது. இதன்படி நேற்று முன்தினம் கடைசி அணியாக வீரர்களின் பட்டியலை ஐ.சி.சி.யிடம் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் சமர்ப்பித்தது. ஆனால் அணியில் யார்-யார் இடம் பெற்றிருக்கிறார்கள் என்பது தெரிவிக்கப்படாமல் இருந்தது.

இந்த நிலையில் ஒரு நாள் தாமதமாக உலக கோப்பை போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி விவரம் நேற்று வெளியிடப்பட்டது. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கலக்கி வரும் ஆல்-ரவுண்டர் ஆந்த்ரே ரஸல் மீண்டும் அணிக்கு திரும்பி இருக்கிறார். ஆனால் அதிரடி மன்னன் பொல்லார்ட், சாமுவேல்ஸ் ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை. விரலில் காயத்தால் அவதிப்படும் சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரைனும் ஓரங்கட்டப்பட்டார். 39 வயதான கிறிஸ் கெய்ல் தனது இடத்தை தக்க வைத்துள்ளார். இது அவருக்கு 5-வது உலக கோப்பை போட்டியாகும்.

X

Maalai Malar
www.maalaimalar.com