மிக்-21 ரக போர் விமானம் கீழே விழுந்து விபத்து

மத்திய பிரதேச மாநிலத்தில் இன்று பயிற்சியில் ஈடுபட்டிருந்த மிக் ரக போர் விமானம் கீழே விழுந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக இரு விமானிகள் உயிர்தப்பினர்.
கீழே விழுந்து நொறுங்கிய போர் விமானம்
கீழே விழுந்து நொறுங்கிய போர் விமானம்
Published on

குவாலியர்:

மத்திய பிரதேசத்தின் குவாலியரில் போர் விமானமான மிக்- 21 விமானத்தில் விமானிகள் வழக்கம்போல் இன்று பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். குவாலியர்  விமான தளத்தில் இருந்து புறப்பட்டுச் சென்ற அந்த விமானம், காலை பத்து மணியளவில் திடீரென கட்டுப்பாட்டை இழந்ததால் விமான தளத்தின் அருகே கீழே விழுந்து நொறுங்கியது. அதில் இருந்த விமானிகள் இருவரும் அவசர கதவுகள் வழியாக வெளியேறி குதித்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். 

இந்த விபத்துக்கான காரணம் குறித்து விமானப்படை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். 2016 ஆம் ஆண்டு முதல் இம்மாதிரியான விபத்துக்கள் காரணமாக 15 போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் உட்பட 27 விமானங்களை இந்திய விமானப்படை இழந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com