பெரும்பான்மையை நிரூபிப்பதில் 100 சதவிகிதம் உறுதியாக உள்ளோம் - எடியூரப்பா

நாளை சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ள நிலையில், பெரும்பான்மையை நிரூபிப்பதில் 100 சதவிகிதம் உறுதியாக உள்ளதாக கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். #Karnataka #FloorTest
பெரும்பான்மையை நிரூபிப்பதில் 100 சதவிகிதம் உறுதியாக உள்ளோம் - எடியூரப்பா
Published on

பெங்களூர்:

கர்நாடகாவில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அதிக இடங்களில் வென்ற கட்சி என்ற அடிப்படையில் பாஜகவை ஆட்சியமைக்க கவர்னர் வாஜுபாய் வாலா அழைப்பு விடுத்தார். எடியூரப்பா நேற்று முதல்வராக பதவியேற்றார். 15 நாட்களில் எடியூரப்பா அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என கவர்னர் உத்தரவிட்டிருந்தார்.

இதற்கு எதிராக காங்கிரஸ் தொடர்ந்த வழக்கை இன்று விசாரித்த சுப்ரீம் கோர்ட், நாளை மாலை 4 மணிக்கு கர்நாடக சட்டசபையில் எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உத்தரவிட்டது. இதனை அடுத்து, தலைமை செயலாளர் உடன் எடியூரப்பா ஆலோசனை நடத்தினார்.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, “சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை வரவேற்கிறேன். பெரும்பான்மையை நிரூபிப்பதில் 100 சதவிகிதம் உறுதியாக உள்ளோம்” என தெரிவித்தார். #Karnataka #FloorTest

X

Maalai Malar
www.maalaimalar.com