

ஹோன்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் ஆகஸ்டு மாதம் ஹோன்டா கிளிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது. இந்தியாவின் ஊரக சந்தையை குறிவைத்து அறிமுகமான ஹோன்டா கிளிக் விற்பனை துவங்கிய நான்கே மாதங்களில் 10,000 யுனிட்கள் விற்பனையாகியுள்ளது.
ஹோன்டாவின் புதிய 125சிசி கிரேசியா அறிமுக நிகழ்வில் அந்நிறுவனத்தின் விற்பனை மற்றும் விளம்பர பிரிவு துணை இயக்குனர் டெட்சுயா கோமின் ஹோன்டா கிளிக் விற்பனை சார்ந்த தகவலை பகிர்ந்து கொண்டார். ஆண், பெண் என இருபாலினத்தவருக்குமான ஸ்கூட்டர் என்ற வகையில் ஹோன்டா கிளிக் அனைத்து வகையான சாலைகளில் ஓட்ட வசதியாக இருக்கும் என அந்நிறுவனம் தெரிவித்திருந்தது.
ஹோன்டா கிளிக் 110 சிசி மாடலில் BS IV HET இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. 8.94 Nm பீக் டார்கியூவில் அதிகபட்சம் 7.9 bhp செயல்திறன் கொண்டுள்ளது. 102 கிலோ எடை கொண்டுள்ள ஹோன்டா கிளிக் சீரற்ற சாலைகளிலும் எளிமையாக இயக்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நான்கு நிறங்களில் கிடைக்கும் கிளிக்குடன் பல்வேறு கூடுதல் உபகரணங்களும் வழங்கப்படுகிறது.
இத்துடன் ரக்டு பிளாக்-பேட்டன் டையர்களை கொண்டுள்ள முதல் ஸ்கூட்டர் என்ற பெருமையை ஹோன்டா கிளிக் பெற்றுள்ளது. இவ்வகை டையர் அதிக க்ரிப் மற்றும் நீண்ட நாள் உழைக்கும் திறன் கொண்டுள்ளது. தமிழகத்தில் கிளிக் மொத்தம் நான்கு நிறங்கள் - பேட்ரியாடிக் ரெட் சார்ந்த வைட், மொரோகேன் புளூ சார்ந்த வைட், ஆர்கஸ் கிரே மற்றும் பிளாக் நிறங்களில் விற்பனை செய்யப்படுகிறது.