சென்னையில் இன்று மாலை மீண்டும் பலத்த மழைக்கு வாய்ப்பு

வெப்பசலனம் காரணமாக நேற்று போல் இன்றும் பிற்பகலிலும் இடி-மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. #ChennaiRain
சென்னையில் இன்று மாலை மீண்டும் பலத்த மழைக்கு வாய்ப்பு
Published on

தமிழ்நாடு முழுவதும் பல பகுதிகளில் அவ்வப்போது கோடை மழை பெய்து வந்தாலும் சென்னைக்கு மழை பாராமுகமாகவே இருந்தது. பக்கத்தில் காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மழை பெய்த நிலையில் சென்னையில் மழை இல்லாததால் வெயில் கொளுத்தியது.

கத்திரி வெயில் முடிந்த பிறகும் சென்னையில் வெயிலின் தாக்கம் குறையவில்லை. சொல்லப் போனால் கத்திரி வெயிலுக்கு பின்னர்தான் சென்னையில் வெயில் சுட்டெரித்தது. நேற்று அதிகபட்சமாக சென்னையில் 105 டிகிரி வெப்பம் நிலவியது. இதனால் பகலில் மக்கள் கடும் அவதிப்பட்டனர்.

ஆனால் பிற்பகல் 2 மணிக்கு திடீர் என்று மேகங்கள் திரண்டு மழை பெய்யத்தொடங்கியது. சிறிது நேரத்தில் பலத்த மழை கொட்டியது. மாலை வரை மழை தூறிக்கொண்டே இருந்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com