துறைமுகம் அலுவலகத்தில் தீ விபத்து

துறைமுகம் அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தீ விபத்து
தீ விபத்து
Published on

ராயபுரம்:

சென்னை துறைமுகம் பொறுப்பு கழக நிர்வாக அலுவலகம் தலைமை செயலகம் எதிரே காமராஜர் சாலையில் அமைந்துள்ளது. 4 தளத்தில் அமைந்துள்ள இந்த அலுவலகத்தில் 3-வது மாடியில் இன்று காலையில் தீ விபத்து ஏற்பட்டது. எஸ்பிளேனடு தீயணைப்பு நிலையத்தில் இருந்து வீரர்கள் வந்து தீயை அணைத்தனர்.

ஆனாலும் அலுவலகத்தில் இருந்த கம்ப்யூட்டர் மற்றும் ஆவணங்கள் தீயில் எரிந்து நாசமாயின. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? நாசவேலையில் யாரும் ஈடுபட்டார்களா? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com