‘தல’ டோனியை கேப்டனாக தேர்வு செய்த ஹர்பஜன் சிங்

ஹர்பஜன் சிங் தனது ஆல்-டைம் லெவன் அணிக்கு ‘தல’ டோனியை கேப்டனாக தேர்வு செய்துள்ளார். மேலும் சச்சின், ரோகித், விராட் கோலிக்கும் இடம் கொடுத்துள்ளார்.
‘தல’ டோனியை கேப்டனாக தேர்வு செய்த ஹர்பஜன் சிங்
Published on

இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் ஹர்பஜன் சிங். தற்போது அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. இந்திய பிரிமீயர் லீக்கில் (ஐபிஎல்) சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

அவருக்கு பிடித்தமான ஆல்-டைம் லெவன் அணியை தெரிவித்துள்ளார். அதில் ‘தல’ டோனியை கேப்டனாக தேர்வு செய்துள்ளார். அத்துடன் சச்சின் தெண்டுல்கர், ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோருக்கும் இடம் கொடுத்துள்ளார்.

ரிக்கி பாண்டிங், தென்ஆப்பிரிக்காவின் கல்லீஸ், இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் ஆண்ட்ரூ பிளின்டாப் ஆகியோரும் இடம்பிடித்துள்ளனர். டோனி விக்கெட் கீப்பராகவும், கேப்டனாகவும் தேர்வு செய்துள்ளார். சுழற்பந்து வீச்சில் வார்னே மற்றும் முத்தையா முரளீதரன் ஆகியோரையும், வேகப்பந்து வீச்சில் வாசிம் அக்ரம் மற்றும் லசித் மலிங்கா ஆகியோரையும் சேர்த்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com