

புதுடெல்லி:
ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவின் 11-வது சீசன் வருகிற 7-ம் தேதி (ஏப்ரல்) மும்பையில் தொடங்குகிறது. ஐ.பி.எல். தொடரில் விளையாடும் 8 அணிகளில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் ஒன்று.
பந்தை சேதப்படுத்திய விவகாரத்தால் ஐதராபாத் அணியின் கேப்டன் பதவியில் இருந்து வார்னர் விலகினார். அதோடு தடை காரணமாக ஐ.பி.எல்.லிலும் அவர் ஆடமுடியாது.
இந்நிலையில், சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் ஆஸ்திரேலியா வீரர் டேவிட் வார்னருக்கு பதிலாக இங்கிலாந்தை சேர்ந்த அலெக்ஸ் ஹேல்ஸ் இடம் பிடித்துள்ளார் என அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சன்ரைசர்ஸ் அணியின் புதிய கேப்டனாக நியூசிலாந்தை சேர்ந்த கேன் வில்லியம்சன் சமீபத்தில் நியமனம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. #IPL2018 #SRH #Tamilnews