நவாஸ் செரீப்பை மீண்டும் பிரதமராக்க முயற்சி செய்வேன்: தீவிரவாதி ஹபீஸ் சயீத்

காஷ்மீர் விடுதலைக்காக நடவடிக்கை எடுப்பேன் என வாக்குறுதி அளித்தால் நவாஸ் செரீப்பை மீண்டும் பிரதமராக்க முயற்சி செய்வேன் என தீவிரவாதி ஹபீஸ் சயீத் கூறினார்.
நவாஸ் செரீப்பை மீண்டும் பிரதமராக்க முயற்சி செய்வேன்: தீவிரவாதி ஹபீஸ் சயீத்
Published on: 

லாகூர்:

பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட லஷ்கர்- இ-தொய்பா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத் ஜமாத்-உத்தவா என்ற அமைப்பை நடத்தி வருகிறான். இவன் மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவன்.

இவனது தலைக்கு அமெரிக்கா பரிசு அறிவித்துள்ளது. இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் அழுத்தத்தின் காரணமாக இவனை பாகிஸ்தான் அரசு கைது செய்து வீட்டுக்காவலில் வைத்தது. பின்னர் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி விடுவிக்கப்பட்டான்.

இந்த நிலையில் லாகூரில் நடந்த பேரணியில் ஹபீஸ் சயீத் கலந்து கொண்டு பேசினார். அப்போது, ‘‘பாகிஸ்தான் அரசு முடிந்தால் என்னை கைது செய்யட்டும்’’ என சவால் விடுத்தான்.

மேலும் பேசும்போது, ‘என்னை கைது செய்வார்கள் என்பதற்காக காஷ்மீர் மக்களுக்காக போராடுவதை நிறுத்த மாட்டேன். எங்களை அடக்க நினைத்தால் மேலும் பலத்தோடு மீண்டு வருவோம். காஷ்மீர் விடுதலைக்காக நடவடிக்கை எடுப்பேன் என வாக்குறுதி அளித்தால் நவாஸ் செரீப்பை மீண்டும் பிரதமராக்க முயற்சி செய்வேன்.

சர்வதேச கண்காணிப்பு குழுக்கள் எங்கள் மையங்களுக்கு வந்து நாங்கள் செய்யும் நலத்திட்ட உதவிகளை பார்வையிடலாம்’ என்றான். #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com