காஷ்மீர்: பரூக் அப்துல்லாவுடன் குலாம் நபி ஆசாத் சந்திப்பு

காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் இன்று காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
பரூக் அப்துல்லாவுடன் குலாம் நபி ஆசாத்
பரூக் அப்துல்லாவுடன் குலாம் நபி ஆசாத்
Published on

ஜம்மு-காஷ்மீரில் பொது பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்து, வீட்டுக் காவலில் அடைத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல் மந்திரி பரூக் அப்துல்லா 7 மாதங்களுக்கு பின்னர் நேற்று விடுதலை ஆனார்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மத்திய முன்னாள் மந்திரியுமான குலாம் நபி ஆசாத் இன்று பரூக் அப்துல்லாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

ஜம்மு-காஷ்மீருக்கான மாநில அந்தஸ்தை பறித்து, இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது இங்கு வாழும் மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்று குறிப்பிட்ட அவர், முறைப்படி இங்கு அரசியல் முன்னெடுப்புகள் நடைபெற வேண்டும்.

X

Maalai Malar
www.maalaimalar.com