ஆதாரமின்றி அரசு மீது குற்றம் சாட்டினால் கமல் மீது வழக்கு: அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி

நடிகர் கமலஹாசன் ஆதாரமின்றி அரசு மீது குற்றம் சாட்டி வருகிறார். எனவே அவர் மீது வழக்கு போடப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.
ஆதாரமின்றி அரசு மீது குற்றம் சாட்டினால் கமல் மீது வழக்கு: அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி
Published on

தூத்துக்குடி:

தூத்துக்குடி திரேஸ் புரத்தில் பக்கிள் ஓடை தூர்வாரும் பணி இன்று நடைபெற்றது. அதனை அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தற்போது நடந்து கொண்டிருக்கும் அ.தி.மு.க. அரசு திரையுலகினர் 457 பேருக்கு விருது வழங்கி கவுரவித்துள்ளது. எந்த அரசும் செய்யாத சாதனையை ஜெயலலிதா அரசு செய்துள்ளது. ஆனால் இதனை பாராட்ட மனமில்லாமல் நடிகர் கமலஹாசன் ஆதாரமின்றி அரசு மீது குற்றம் சாட்டி வருகிறார்.

அவர் உடனே இத்தகையான அவதூறு குற்றச்சாட்டுகளை நிறுத்தி கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அவர் மீது வழக்கு தொடரப்படும். கமலஹாசன் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com