உணவில் விஷத்தன்மை - மதராசாவைச் சேர்ந்த 15 வயது மாணவி உயிரிழப்பு

தெலுங்கானா மாநிலம், நிஜாமாபாத் மாவட்டத்தில் உள்ள அரபு மதராசாவில் உணவு சாப்பிட்டு மயங்கி விழுந்ததில் 15 வயது மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.
உணவில் விஷத்தன்மை - மதராசாவைச் சேர்ந்த 15 வயது மாணவி உயிரிழப்பு
Published on

ஐதராபாத்:

தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தில் உள்ள அரபு மதராசாவில் தங்கி ஆயிரக்கணக்கான மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். அவர்கள் இன்று சாப்பிட்ட உணவில் விஷத்தன்மை ஏற்பட்டதால் வாந்தி ,பேதி, மயக்கம் ஆகியவற்றால் 14 பேர் பாதிக்கப்பட்டனர்.

அவர்கள் உடனடியாக நிஜாமாபாத் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் 15 வயது சிறுமி மருத்துவனைக்கு கொண்டு வரும் வழியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உணவு மற்றும் நீரின் மாதிரிகள் சோதனை செய்வதற்காக எடுத்துச்செல்லப்பட்டன. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

மதராசாவில் வழங்கப்பட்ட உணவு சாப்பிட்டு மயங்கி விழுந்ததில் 15 வயது மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com