கெய்ல், சங்ககராவை ரிலீஸ் செய்தது பாகிஸ்தான் சூப்பர் லீக் அணிகள்

அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல், கிரிக்கெட் ஜாம்பவான் சங்ககரா ஆகியோரை பாகிஸ்தான் சூப்பர் லீக் அணியான கராச்சி கிங்ஸ் அணி ரிலீஸ் செய்துள்ளது.
கெய்ல், சங்ககராவை ரிலீஸ் செய்தது பாகிஸ்தான் சூப்பர் லீக் அணிகள்
Published on

டி20 கிரிக்கெட் என்றாலே ரசிகர்களுக்கு ஞாபகம் வருவது வெஸ்ட் இண்டீஸின் கிறிஸ் கெய்ல். டி20 கிரிக்கெட் போட்டியில் மட்டும் 10 ஆயிரம் ரன்களை கடந்து சாதனைப் படைத்துள்ளார். இவர் ஐ.பி.எல்,, பிக் பாஷ், கரீபியன் பிரிமீயர் லீக், பாகிஸ்தான் சூப்பர் லீக் என பெரும்பாலான டி20 கிரிக்கெட் லீக்கில் விளையாடி வருகிறார்.

இதேபோல் கிரிக்கெட் போட்டியில் பல்வேறு சாதனைகளைப் படைத்தவர் இலங்கை அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் சங்ககரா. இவர்கள் இருவரும் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் விளையாடி வந்தார்கள்.

கிறிஸ் கெய்ல் கராச்சி அணிக்காக விளையாடி வந்தார். தற்போது அவரை கராச்சி அணி ரிலீஸ் செய்துள்ளது. அதேபோல் சங்ககராவையும் கராச்சி அணி ரிலீஸ் செய்துள்ளது. அத்துடன் பொல்லார்டையும் ரிலீஸ் செய்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com