உலகக்கோப்பை கால்பந்து 2018 - பிரான்ஸ் அணி 2- 1 என ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ‘சி’ பிரிவில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பிரான்ஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தியது. #FIFA2018 #WolrdCup2018 #FRAvsAUS
உலகக்கோப்பை கால்பந்து 2018 - பிரான்ஸ் அணி 2- 1 என ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது
Published on

உலக கோப்பை கால்பந்து போட்டியில் இன்று மதியம் 3.30 மணிக்கு கசன் அலினாவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ‘சி’ பிரிவில் உள்ள பிரான்ஸ்-ஆஸ்திரேலியா அணிகள் மோதின.

ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் எதுவும்  அடிக்கவில்லை. இதையடுத்து, ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் நட்சத்திர வீரர் அண்டோனி கிரீஸ்மேன் 58 வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலை வகிக்க வைத்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆஸ்திரேலியாவின் மைக் ஜெடினக் 62-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இதனால் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமனிலை வகித்தன.

இதைத்தொடர்ந்து, ஆட்டத்தின் 80வது நிமிடத்தில் பவுல் போக்பா ஒரு கோல் அடித்தார். இதன்மூலம் பிரான்ஸ் அணி 2-1 என முன்னிலை பெற்றது.

தொடர்ந்து, ஆஸ்திரேலியா அணியால் மேற்கொண்டு கோல் அடிக்க முடியவில்லை. இறுதியில், பிரான்ஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. #FIFA2018 #WolrdCup2018 #FRAvsAUS

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com