போதை பொருட்கள் விற்ற 4 பேர் கைது

பேரளம் பகுதியில் போதை பொருட்களை விற்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
போதை பொருட்கள் விற்ற 4 பேர் கைது
Published on

நன்னிலம்:

திருவாரூர் மாவட்டம் பேரளம், கீரனூர், கொல்லுமாங்குடி, கோவில்திருமாளம், இஞ்சிக்குடி உள்ளிட்ட இடங்களில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் பேரளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் போலீசார் அப்பகுதிகளுக்கு சென்று கண்காணிப்பு பணி மேற்கொண்டனர்.

அப்போது அங்கு உள்ள பெட்டி கடைகளில் போலீசார் சோதனையிட்டனர். இதில் கீரனூரை சேர்ந்த கார்த்தி (வயது32), கொல்லுமாங்குடியை சேர்ந்த காதர் (27), கோவில்திருமாளத்தை சேர்ந்த சசிகுமார் (45), இஞ்சிக்குடியை சேர்ந்த சம்பந்தம் (70) ஆகியோர் தங்களுடைய கடைகளில் போதை பொருட்களை விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்தி, காதர், சசிகுமார், சம்பந்தம் ஆகிய 4 பேரை கைது செய்தனர். 

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com