மகாராஷ்டிரா - தேசியவாத காங்கிரசின் 3 எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்தனர்

மகாராஷ்டிராவில் நேற்று பதவி விலகிய தேசியவாத காங்கிரசை சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்கள் முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் முன் இன்று பா.ஜ.க.வில் இணைந்தனர்.
முதல் மந்திரி முன் பாஜகவில் இணைந்த தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ
முதல் மந்திரி முன் பாஜகவில் இணைந்த தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ
Published on

மும்பை:

மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி படுதோல்வியை சந்தித்தது.

இதற்கிடையே, மகாராஷ்டிரா சட்டசபைக்கு வரும் அக்டோபர் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. சட்டசபை தேர்தல் நெருங்கியதை தொடர்ந்து காங்கிரஸ், தேசியவாத காங்கிரசை சேர்ந்த தலைவர்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆளும் பா.ஜனதா, சிவசேனா கட்சிகளில் ஐக்கியமாகி வருகின்றனர்.

இதற்கிடையே, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மும்பை வடாலா தொகுதி எம்.எல்.ஏ. காளிதாஸ் கோலம்கர் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். மேலும், தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வைபவ் பிச்சாத் (அகோலா தொகுதி), சிவேந்திர ராஜே போசலே (சத்தாரா), சந்தீப் நாயக் (ஐரோலி) ஆகியோரும் தஙகளது பதவியை ராஜினாமா செய்தனர். இவர்கள் சபாநாயகர் ஹரிபாவு பாகடேவை சந்தித்து ராஜினாமா கடிதத்தை கொடுத்தனர்.

இந்நிலையில், பதவி விலகிய தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் 3 பேரும் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் முன்னிலையில் பா.ஜ.க.வில் இன்று இணைந்தனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com