பிரதமர் மோடி விடுத்த அழைப்பை நிராகரித்தேன்: சரத்பவார் பரபரப்பு பேட்டி

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க பிரதமர் மோடி விடுத்த அழைப்பை நான் ஏற்றுக்கொள்ளவில்லை என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறினார்.
மகாராஷ்டிரா: நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பே வெளிநடப்பு செய்த பாஜக

மகாராஷ்டிர சட்டசபையில் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தொடங்குவதற்கு முன்பே, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதுடன் வெளிநடப்பு செய்தனர்.
மகாராஷ்டிரா - தேசியவாத காங்கிரசின் திலிப் வல்சே பாட்டீல் இடைக்கால சபாநாயகராக நியமனம்

மகாராஷ்டிரா மாநில சட்டசபையில் இடைக்கால சபாநாயகராக தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. திலிப் வல்சே பாட்டீல் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
காங்கிரசுடன் கரம் கோர்த்த காவி: அரசியலில் புதிய சகாப்தம்

ஆட்சி சிம்மாசனத்தில் உத்தவ் தாக்கரே அமர்ந்ததன் மூலம், காவியும் (சிவசேனா), காங்கிரசும் கரம் கோர்த்து இந்திய அரசியல் வரலாற்றில் புதிய சகாப்தத்தை படைத்து விட்டன.
மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரசுக்கு துணை முதல்வர் பதவி- காங்கிரசுக்கு சபாநாயகர் அந்தஸ்து

மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையில் அமைய உள்ள புதிய அரசில், தேசியவாத காங்கிரசுக்கு துணை முதல்வர் பதவியும், காங்கிரசுக்கு சபாநாயகர் பதவியும் வழங்கப்பட உள்ளது.
மந்திரி சபையில் என்னை சேர்ப்பது பற்றி உத்தவ் தாக்கரே முடிவு செய்வார்: அஜித்பவார்

சிவசேனா தலைமையில் அமையும் அரசின் மந்திரி சபையில் என்னை சேர்ப்பது பற்றி உத்தவ் தாக்கரே முடிவு செய்வார் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித்பவார் கூறினார்.
நான் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் தான் எப்போதும் இருப்பேன் - அஜித் பவார்

நான் தேசியவாத காங்கிரஸ் கட்சியில்தான் உள்ளேன், எப்போதும் இக்கட்சியில்தான் நீடிப்பேன் என அஜித் பவார் கூறியுள்ளார்.
மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே முதல்-மந்திரி ஆகிறார்: நாளை பதவி ஏற்பு விழா

மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்கிறது. நாளை மும்பை தாதர் சிவாஜிபார்க் மைதானத்தில் நடக்கும் விழாவில் உத்தவ் தாக்கரே முதல்-மந்திரியாக பதவி ஏற்கிறார்.
மகாராஷ்டிரா - சரத் பவாருடன் அஜித் பவார் திடீர் சந்திப்பு

மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரை சந்திக்க அவரது வீட்டுக்கு அஜித் பவார் இன்று இரவு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
மகாராஷ்டிரா முதல் மந்திரியாக உத்தவ் தாக்கரே தேர்வு - கூட்டணி கட்சிகள் தீர்மானம் நிறைவேற்றம்

மகாராஷ்டிரா மாநில முதல் மந்திரியாக உத்தவ் தாக்கரே தேர்வு செய்யப்பட்டு உள்ளார் என கூட்டணி கட்சிகள் தீர்மானம் நிறைவேற்றின.
நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்வது எப்படி? மும்பையில் இன்று இரவு பாஜக எம்எல்ஏக்கள் ஆலோசனை

மகாராஷ்டிர மாநிலத்தில் நாளை நடைபெற உள்ள நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்வது குறித்து மும்பையில் இன்று பாஜக எம்எல்ஏக்கள் ஆலோசனை நடத்த உள்ளனர்.
மகாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்பை நேரலை செய்ய வேண்டும் -உச்ச நிதிமன்றம் உத்தரவு

மகாராஷ்டிராவில் நாளை நடைபெற உள்ள நம்பிக்கை வாக்கெடுப்பை நேரலை செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மகாராஷ்டிரா சட்டசபையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தவேண்டும்- உச்ச நீதிமன்றம் உத்தரவு

மகாராஷ்டிர சட்டசபையில் முதல்வர் பட்னாவிஸ் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அஜித்பவாருக்கு பின்னால் நான் இருப்பதாக கூறுவது தவறு: சரத்பவார்

மகாராஷ்டிராவில் பாரதீய ஜனதா ஆட்சி அமைத்த விவகாரத்தில் அஜித்பவார் பின்னால் நான் இருப்பதாக கூறுவது தவறு என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறினார்.
நம்பிக்கை வாக்கெடுப்பில் பா.ஜ.க.வுக்கு எதிராக அனைத்து எம்.எல்.ஏ.க்களும் வாக்களிப்பர் - சரத் பவார்

நம்பிக்கை வாக்கெடுப்பில் பா.ஜ.க.வுக்கு எதிராக அனைத்து எம்.எல்.ஏ.க்களும் வாக்களிப்பர் என சரத் பவார் உறுதியுடன் கூறியுள்ளார்.
மகாராஷ்டிரா வழக்கு- நாளை காலை உத்தரவு பிறப்பிக்கிறது உச்ச நீதிமன்றம்

மகாராஷ்டிராவில் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் அரசு அமைத்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நாளை காலை தீர்ப்பு வழங்கப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
எங்களுக்குத் தான் பெரும்பான்மை உள்ளது- ஆளுநர் மாளிகையில் சிவசேனா கூட்டணியினர் கடிதம்

சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் தலைவர்கள் இன்று ஆளுநர் மாளிகை சென்று, ஆட்சியமைக்க பெரும்பான்மை இருப்பதாக கூறி எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை கொடுத்தனர்.
பட்னாவிஸ் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க 14 நாள் அவகாசம் அளித்த ஆளுநர்

மகாராஷ்டிராவில் தேவேந்திர பட்னாவிஸ் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க 14 நாட்கள் அவகாசம் அளித்திருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
மகாராஷ்டிராவில் பா.ஜனதா ஆட்சி அமைத்தது ஜனநாயகத்துக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய துரோகம்- கனிமொழி

மகாராஷ்டிரா மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சி அமைத்து இருப்பது தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமின்றி ஜனநாயகத்துக்கு இழைக்கப்பட்டு உள்ள மிகப் பெரிய துரோகம் என்று கனிமொழி எம்.பி. கூறியுள்ளார்.