நடுவானில் இண்டிகோ விமானத்தில் தீ- உயிர் தப்பிய கோவா மந்திரி

கோவாவில், நடுவானில் பறந்த இண்டிகோ விமானத்தின் எஞ்ஜினில் தீப்பற்றியதால் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
இண்டிகோ விமானம் அவசரமாக தரையிறக்கம் (மாதிரிப் படம்)
இண்டிகோ விமானம் அவசரமாக தரையிறக்கம் (மாதிரிப் படம்)
Published on

பனாஜி:

கோவா மாநிலத்தின் டபோலிம் நகரில் உள்ளது கோவா சர்வதேச விமான நிலையம். இங்கிருந்து நேற்று இரவு டெல்லி நோக்கி இண்டிகோ விமானம் ஒன்று புறப்பட்டது. விமானத்தில் மற்ற பயணிகளுடன் கோவா சுற்றுச்சூழல் மந்திரி நிலேஷ் கப்ரால் மற்றும் அவரது மெய்க்காப்பாளரும் இருந்தனர். 

ஓடுதளத்தில் இருந்து வானில் பறந்த சற்று நேரத்தில் விமானத்தின் எஞ்ஜின் பகுதியில் தீப்பற்றியுள்ளது. இதை கண்டறிந்த விமானிகள் உடனடியாக விமானத்தை கோவா விமான நிலையத்தில் தரையிறக்கினர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இது குறித்து விமான நிலைய அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com