குஜராத்: சூரத் குடோனில் திடீர் தீ விபத்து - தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்

குஜராத் மாநிலத்தில் உள்ள குடோனில் நேற்று திடீரென ஏற்பட்ட தீயை அணைக்க 12-க்கு மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள் போராடின.
குஜராத்: சூரத் குடோனில் திடீர் தீ விபத்து - தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்
Published on

ஜெய்ப்பூர்:

குஜராத் மாநிலத்தில் உள்ள குடோனில் நேற்று திடீரென ஏற்பட்ட தீயை அணைக்க 12-க்கு மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள் போராடின.

குஜராத் மாநிலம் சூரத் நகரில் உள்ள ராண்டர் டவுன் பகுதியில் பல்வேறு குடோன்கள் உள்ளது. இந்நிலையில் நேற்று இரவு இந்த பகுதியில் உள்ள குடோனில் திடீரென தீ பிடித்தது. தீ மளமளவென பரவியதால் குடோன் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. இதில் வானை நோக்கி தீப்பிழம்புகள் எழுந்தன. இதையடுத்து அப்பகுதி முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்தது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு 12-க்கு மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள் அங்கு விரைந்து வந்தன. கொழுந்து விட்டெரியும் தீயை அணைக்க வீரர்கள் போராடினர். இந்த தீவிபத்தில் ஏற்பட்ட சேத விவரங்கள் வெளியாகவில்லை.

ஏற்கனவே, நேற்று முன்தினம் மும்பையின் லோவர் பரேலில் கமலா மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com