முன்னாள் எம்.எல்.ஏ. மைக்கேல் ராயப்பன் அ.தி.மு.க.வில் சேர்ந்தார்

அ.ம.மு.க. கழகத்தில் இருந்து விலகிய திருநெல்வேலி வடக்கு மாவட்ட செயலாளர் பாப்புலர் முத்தையா, முன்னாள் எம்.எல்.ஏ., எஸ்.மைக்கேல் ராயப்பன் ஆகியோர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.
முன்னாள் எம்.எல்.ஏ. மைக்கேல் ராயப்பன் அ.தி.மு.க.வில் சேர்ந்தார்
Published on

சென்னை:

அ.ம.மு.க. கழகத்தில் இருந்து விலகிய திருநெல்வேலி வடக்கு மாவட்ட செயலாளர் பாப்புலர் முத்தையா, முன்னாள் எம்.எல்.ஏ., எஸ்.மைக்கேல் ராயப்பன், நிர்வாகிகள் சின்னத்துறை, ஈஸ்வரன், எம்.சி.ராஜன், அசன் ஜாபர் அலி, சங்கர பாண்டியன், சங்கர சுப்பிரமணியன், முத்தையா, குருசேவ், அமுதா பாலசுப்பிரமணியன், மாரியப்பன், சின்ன பாண்டி, கே.சேகர், காமராஜ் ஆகியோர் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.

இதேபோல அ.ம.மு.க. திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ஆர்.பாலசுப்பிரமணியன், ராஜாராம், ஒன்றிய செயலாளர் அப்பாதுரை, நகர செயலாளர் பாஸ்கர், நிர்வாகிகள் ஆர்.விஜய், அசோக், சூரியபிரகாஷ் ஆகியோர் அக்கட்சியில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் சேர்ந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com