ஆஷஸ் டெஸ்ட் - இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 374 ரன்கள் குவிப்பு

ஆஷஸ் டெஸ்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 374 ரன்கள் குவித்து ஆல்–அவுட் ஆனது.
பந்தை விரட்டும் ஸ்டீவ் ஸ்மித்
பந்தை விரட்டும் ஸ்டீவ் ஸ்மித்
Published on

பர்மிங்காம்:

இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஆ‌ஷஸ் தொடரின் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பர்மிங்காமில் நடந்து வருகிறது.

முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா ஸ்டீவ் ஸ்மித் 144 ரன்கள்,  அடிக்க, முதல் இன்னிங்சில் 284 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

அதன்பின், முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 2-வது நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட்டுக்கு 267 ரன்கள் எடுத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர் ரோரி பர்ன்ஸ் 125 ரன்னுடனும், பென் ஸ்டோக்ஸ் 38 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்நிலையில், மூன்றாவது நாளான நேற்று ரோரி பர்ன்சும், பென் ஸ்டோக்சும் தொடர்ந்து விளையாடினர். சிறிது நேரத்தில் பென் ஸ்டோக்ஸ் அரை சதமடித்து அவுட்டானார். ரோரி பர்ன்ஸ் 133 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த விக்கெட் கீப்பர் பேர்ஸ்டோ (8 ரன்), மொயீன் அலி (0) நிலைக்கவில்லை.

9-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கிறிஸ் வோக்சும், ஸ்டூவர்ட் பிராட்டும் போராடி 350 ரன்களை கடக்க வைத்தனர். ஸ்டூவர்ட் பிராட் 29 ரன்னிலும், ஜேம்ஸ் ஆண்டர்சன் 3 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

இறுதியில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 135.5 ஓவர்களில் 374 ரன்கள் குவித்து ஆல்–அவுட்டானது. ஆஸ்திரேலியாவை விட 90 ரன்கள் முன்னிலை பெற்றது. கிறிஸ் வோக்ஸ் 37 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தார்.

ஆஸ்திரேலியா சார்பில் நாதன் லயன், கம்மின்ஸ் தலா 3 விக்கெட்டுகளும், பேட்டின்சன், பீட்டர் சிடில் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

90 ரன்கள் பின்தங்கிய நிலையில் ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்சை ஆடியது. 3-ம் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் எடுத்துள்ளது. ஸ்டீவ் ஸ்மித் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com