இந்தியா ‘ஏ’ அணியை 253 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து லயன்ஸ்

இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கெதிரான டெஸ்டில் இந்தியா ‘ஏ’ 253 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. #INDA #Rahane #Pant #mohammedSiraj
இந்தியா ‘ஏ’ அணியை 253 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து லயன்ஸ்
Published on

முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து லயன்ஸ் 423 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா 197 ரன்கள் சேர்த்தது. 226 ரன்கள் முன்னிலைப் பெற்ற இங்கிலாந்து லயன்ஸ் 2-வது இன்னிங்சில் 5 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

இதனால் இந்தியா ‘ஏ’ அணியின் வெற்றிக்கு 421 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது. கடினமான இலக்குடன் இந்தியா ‘ஏ’ அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது.

ரகானே (48), ரிஷப் பந்த் (61) ஆகியோரைத் தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற இந்தியா ‘ஏ’ அணி 167 ரன்னில் சுருண்டது. இதனால் இந்தியா ‘ஏ’ அணி 253 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com