பா.ஜனதாவுக்கு எதிராக கடிதம்: கிறிஸ்தவ பேராயருக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ்

பா.ஜனதாவுக்கு எதிராக வாக்களிக்கும்படி மறைமுகமாக கிறிஸ்தவர்களுக்கு காந்திநகர் கத்தோலிக்க பேராயர் தாமஸ் மக்வான் கடிதம் எழுதியது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பா.ஜனதாவுக்கு எதிராக கடிதம்: கிறிஸ்தவ பேராயருக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ்
Published on

குஜராத் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கடந்த வாரம் காந்திநகர் கத்தோலிக்க பேராயர் தாமஸ் மக்வான் கிறிஸ்தவர்களுக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், ‘சிறுபான்மையினருக்கு பாதுகாப்பற்ற தன்மை வளர்ந்துவருவதால் ஜனநாயக வழியில் தேசியவாத படைகளிடம் இருந்து நாட்டை காப்பாற்றுங்கள்’ என்று எழுதியிருந்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com