தேர்தல் வழக்கை எதிர்த்த கனிமொழி மனு மீது நாளை தீர்ப்பு

தனக்கு எதிராக தொடரப்பட்ட தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரி கனிமொழி தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் நாளை பிறப்பிக்கிறது.
கனிமொழி
கனிமொழி
Published on

சென்னை:

பாராளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் தி.மு.க. சார்பில் கனிமொழி போட்டியிட்டு வெற்றிப்பெற்றார்.

இவரது வெற்றியை எதிர்த்து தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி வாக்காளர் சந்தானகுமார் தேர்தல் வழக்கை சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்தார்.

இந்த வழக்கை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் விசாரித்து வருகிறார்.

சந்தானகுமார் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கனிமொழி மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை கடந்த வாரம் நடந்தது.

இருதரப்பு வக்கீல்களும் ஆஜராகி வாதிட்டனர். இந்த மனு மீதான தீர்ப்பை திங்கட்கிழமை (இன்று) பிறப்பிப்பதாக நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இதன்படி இந்த வழக்கு நீதிபதி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கனிமொழி மனு மீதான தீர்ப்பை  நாளை (செவ்வாய்கிழமை) பிறப்பிப்பதாக நீதிபதி உத்தரவிட்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com