வன்முறையாக மாறிய கர்நாடக உள்ளாட்சி தேர்தல்களம் - காங்கிரஸ் வெற்றி கூட்டத்தில் ஆசிட் வீச்சு

கர்நாடகா மாநிலத்தின் உள்ளாட்சி தேர்தலில் தும்குர் பகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் இனாயத்துல்லா கானின் வெற்றி கொண்டாட்டத்தில் ஆசிட் வீசப்பட்டதில் 8 பேர் படுகாயம் அடைந்தனர். #KarnatakaLocalBodyElections
வன்முறையாக மாறிய கர்நாடக உள்ளாட்சி தேர்தல்களம் - காங்கிரஸ் வெற்றி கூட்டத்தில் ஆசிட் வீச்சு
Published on

பெங்களூரு:

கர்நாடகாவில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகியவை சுமார் 60 சதவிகிதம் முன்னிலை பெற்று விளங்குகிறது. இன்று மாலை 4 மணி வரை வெளியிடப்பட்ட தேர்தல் முடிவுகளில் காங்கிரஸ் கட்சி 982 இடங்களில் வெற்றி பெற்று முன்னிலை பெற்றுள்ளது.

பாஜக 927 இடங்களில் வெற்றி பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்த தேர்தலில் பாஜக பின்னடைவை சந்தித்துள்ளது. இந்நிலையில், தும்குர் பகுதியில் வெற்றி பெற்ற இனாயத்துல்லா கான் என்ற காங்கிரஸ் வேட்பாளரின் வெற்றி கொண்டாட்டத்தில் மர்ம நபர்கள் ஆசிட் வீசினர்.

இந்த ஆசிட் வீச்சில் இனாயத்துல்லாவின் ஆதரவாளர்கள் 8 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. #KarnatakaLocalBodyElections 

X

Maalai Malar
www.maalaimalar.com