சத்துணவில் முட்டை வழங்குவது நிறுத்தப்படவில்லை: ஸ்டாலின் புகாருக்கு அமைச்சர் பதில்

பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் சத்துணவுடன் முட்டை தடையின்றி வழங்கப்படுவதாக அமைச்சர் சரோஜா விளக்கமளித்துள்ளார்.
சத்துணவில் முட்டை வழங்குவது நிறுத்தப்படவில்லை: ஸ்டாலின் புகாருக்கு அமைச்சர் பதில்
Published on

தமிழக அரசு பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் சத்துணவுடன் முட்டை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், முட்டை வழங்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளதாக தி.மு.க செயல்தலைவர் மு.க ஸ்டாலின் அரசை குற்றம் சாட்டியிருந்தார்.

மேலும், பல்வேறு கட்சித்தலைவர்கள் இவ்விவகாரத்தில் குரல் எழுப்பியுள்ள நிலையில், இன்று காலை அமைச்சர் சரோஜா மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இவ்விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

இதனையடுத்து, அமைச்சர் சரோஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அனைத்து அங்கன்வாடி மையங்கள் மற்றும் பள்ளிகளில் முட்டை தடையின்றி வழங்கப்படுகிறது. வெளிச்சந்தையில் முட்டை விலை உயர்ந்தாலும், சத்துணவுடன் முட்டை தொடர்ந்து வழங்கப்படுவதாக கூறியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com